இன்று சென்னை கலை கல்லூரி மாணவர்கள் பஸ் டே என்று ஒரு பேருந்தை வாடகைக்கு அமர்த்தியோ அல்லது பஸ்ஸை வழிமறித்து அதில் உள்ள பயணிகளை இறக்கி விட்டு விட்டு அந்த பேருந்தை ஊர்வலமாக அழைத்து செல்கின்றனர் அப்போது ஏற்கனவே கடும் போக்குவரத்து நேர்சலில் சிக்கி தவிக்கும் சென்னை மக்கள் இந்த வேண்டாத செயலால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். ஒரு முன்னேறிய சென்னை போன்ற பெரு நகரத்தில் இவ்வாறு பொது மக்கள் அவதிக்குலாக்கப்படுவது கண்டிக்கத்தக்கதாகும்.
மாணவர்களுக்கு பணஉதவி போன்றவை ஆளும், எதிர் கட்சிகள் தரப்பில் தரப்படுகிறது. ஆளும் அரசும் இதை கண்டும் காணாமலும் கண்ணை மூடிக்கொண்டுள்ளது. அப்போது தெருவில் போகும் பெண்களை கேலி செய்வது அந்த பெண்களை மானபங்கபடுத்தும் செயலையும் இந்த மாணவர்கள் அரகேற்றுகின்றனர். இது மாணவர்கள் மீது மக்களுக்கு வெறுப்பையே ஏற்படுத்தும். மாணவர்கள் பகத்சிங் போல இருக்க வேண்டுமே ஒழிய கருணாநிதி போல அல்ல.
No comments:
Post a Comment