Tuesday, May 31, 2011

சமச்சீராகுமா கல்வி

தமிழக அரசின் கல்வி   முதலாளிகளுக்கு  ஆதரவான போக்கும் ,அரசு பள்ளிகளின்  அவல நிலையும்


கல்வி என்பது அனைவருக்கும் இலவசமாக கிடைக்கவேண்டும். அதுவும் தரமான கல்வியாக இருக்கவேண்டும், என்பது இன்றுள்ள அனைத்து பெற்றோர்களின் நியாயமான எதிர்பார்ப்பாகும்.  தமிழகத்தில் அரசு பள்ளிகளு கென்று தனியான பாடத்திட்டமும் ,  மெட்ரிக் பள்ளிகளுகென்று தனியான பாடத்திட்டமும்  இருக்கிறது.  அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு  கடும் போட்டி நிலவும்  வேலைச்சந்தையில்  போட்டியிடக்கூடிய  எந்த வலுவும்  தர இயலாததாக அரசு பள்ளிகளுக்கான பாடத்திட்டம் இருக்கிறது  என்பது தான் இன்றுள்ள நிலைமை.


  இந்த அனைத்து படத்திட்டங்களையும் ஒன்றாக ஆக்க வேண்டும் என்று கல்வியாளர்களும் , இடதுசாரி இயக்கங்களும் பல போராட்டங்களை நடத்தி வந்தன. இதனை தொடர்ந்து ஒரு வல்லுநர் குழு தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டது. அந்த குழுவின் பரிந்துரைகளின்படி பாடத்திட்டங்கள் பதிப்பிக்கப்பட்டன.இந்த படத்திட்டதிற்கு மெட்ரிக் பள்ளிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதோடு அந்த பாடத்திட்டங்கள் அச்சுப்பிழை, மற்றும் தவறான தகவல்கள் நிறைந்ததாக வெளிவந்தது. சமச்சீர்கல்வி என்பது தங்கள் சாதனையாக காட்டிக்கொள்ள பெயரளவிற்கே அப்போது இருந்த திமுக அரசால் கொண்டு வரப்பட்டது
மேலும் படிக்க
கீற்று இணையதளம்

No comments:

Post a Comment