அதனை ஆதரிக்க வேண்டியதன் அவசியமும்
தற்போதைய அமெரிக்கன் கல்லூரிப் பிரச்னை என்ன? அதற்குக் காரணம் யார்?
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பெரும்பாலான ஆசிரியர்களும் மாணவர்களும் வகுப்புகளுக்குச் செல்ல முடியாத சூழல் கல்லூரிக் கல்வி இயக்குனரகத்தால் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லூரியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முதலில் பிரச்னை உருவான போது அதில் பகத்சிங் மாணவர் இளைஞர் கூட்டமைப்பு என்ற பெயரில் கல்லூரியின் மாணவர் மற்றும் கல்வி நலனுக்காக நாங்கள் போராடினோம். அந்த அடிப்படையில் தற்போது கல்வியின் பால் அக்கறை கொண்ட மதுரை மக்களின் மனதில் இருப்பதாக நாங்கள் உணரும் சில கேள்விகளுக்கான பதில்களை முன்வைப்பது இது குறித்து நிலவும் குழப்ப நிலையை அகற்ற உதவும் என்று கருதி அக்கேள்விகளையும் அவற்றிற்கான பதில்களையும் முன் வைக்கிறோம்.
தற்போதைய அமெரிக்கன் கல்லூரிப் பிரச்னை என்ன? அதற்குக் காரணம் யார்?
மதுரை ராமநாதபுரம் திருமண்டிலப் பேராயர் தலைமையில் இயங்கும் ஆட்சிமன்றக் குழுவினால் நியமிக்கப்பட்ட ஒருவர் தற்போது கல்லூரி முதல்வராக இருப்பதே தற்போதைய அமெரிக்கன் கல்லூரியின் பிரச்னை. இப்பிரச்னை உருவாகக் காரணம் இந்த நியமனத்திற்குத் தமிழ் நாட்டின் கல்லூரிக் கல்வி இயக்குனரகம் அளித்துள்ள தவறான ஒப்புதலே.