தமிழக அரசின் கல்வி முதலாளிகளுக்கு ஆதரவான போக்கும் ,அரசு பள்ளிகளின் அவல நிலையும்
கல்வி என்பது அனைவருக்கும் இலவசமாக கிடைக்கவேண்டும். அதுவும் தரமான கல்வியாக இருக்கவேண்டும், என்பது இன்றுள்ள அனைத்து பெற்றோர்களின் நியாயமான எதிர்பார்ப்பாகும். தமிழகத்தில் அரசு பள்ளிகளு கென்று தனியான பாடத்திட்டமும் , மெட்ரிக் பள்ளிகளுகென்று தனியான பாடத்திட்டமும் இருக்கிறது. அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு கடும் போட்டி நிலவும் வேலைச்சந்தையில் போட்டியிடக்கூடிய எந்த வலுவும் தர இயலாததாக அரசு பள்ளிகளுக்கான பாடத்திட்டம் இருக்கிறது என்பது தான் இன்றுள்ள நிலைமை.