கட்டுப்படுத்த முடியா வண்ணம் பல்கிப்பெருகி வரும் ஊழலை எதிர்த்த அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதம் புதுடெல்லி ராம்லீலா மைதானத்தில் தொடர்ந்து கொண்டுள்ளது. அதற்கு ஆதரவாக நாடு முழுவதும் மக்கள் குறிப்பாக இளைஞர்களும் மாணவர்களும் திரண்டெழுந்து கொண்டுள்ளனர். தனக்கெனஅமைப்பேதுமின்றி ஒரு தனிமனித ராணுவமாகச் செயல்படும் அன்னா ஹசாரேயின் இயக்கம் மக்களின் ஆதரவினைஒருங்குதிரட்டுவதில் பெரிய வெற்றிஎதையும் பெற்றுவிடமுடியாது என்று கருதிய ஆட்சியாளர்கள் நம்மை அடிமைப்படுத்தி ஆட்சி செய்த வெள்ளையர்களையும் மிஞ்சும் விதத்தில் பல்வேறு தடைகளையும் கட்டுப்பாடுகளையும் அவரது அறவழிப் போராட்டத்திற்கு விதித்தனர். தன்வயப்பட்டசிந்தனையிலேயே மூழ்கிக் கிடக்கும் மக்கள் சக்தி எங்கேஎழுச்சியுடன் அவருக்குப்பின்பலமாக பொங்கி எழப்போகிறது என்ற மக்கள் குறித்த கணிப்பும் அவர்களுக்கு இந்த இயக்கம் குறித்த ஒரு மெத்தனப்போக்கை ஏற்படுத்தியது. இவை அனைத்தையும் பொய்யயன நிரூபித்து இன்று அந்த இயக்கம் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது. நீறுபூத்த நெருப்பாக மாணவர் இளைஞர் மனங்களில்
கனன்று கொண்டிருந்த அதிருப்தியும் நிலவும் நிலைமைகளின் மீதான உடன்பாடின்மையும் பேருருப் பெற்று இவ்வியக்கத்திற்கான ஆதரவாகப்
பரிணமித்துள்ளது.
கனன்று கொண்டிருந்த அதிருப்தியும் நிலவும் நிலைமைகளின் மீதான உடன்பாடின்மையும் பேருருப் பெற்று இவ்வியக்கத்திற்கான ஆதரவாகப்
பரிணமித்துள்ளது.