Friday, March 11, 2011

கல்வியின் பால் அக்கறை கொண்ட மக்களின் பிரச்னையாக மாற்றப் படாமல் அமெரிக்கன் கல்லூரி பிரச்னைக்குத் தீர்வு இல்லை

மீண்டும் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பிரச்னை தலைதூக்கியுள்ளது. அதாவது ஏற்கனவே தலைதூக்கி இடையில் நீதிமன்றத் தீர்ப்பினால் மட்டுப்பட்டிருந்த கல்லூரியை மதவாதிகள் கையகப்படுத்தும் பிரச்னை மீண்டும் தலை தூக்கியுள்ளது. கல்லூரியின் முன்னாள் முதல்வர் சின்னராஜ் ஜோசப் ஜெயக்குமார் அவர்களைச் செயலராகக் கொண்ட ஆட்சிமன்றக் குழு, மதுரை ராமநாதபுரம் மண்டிலப் பேராயரைத் தலைவராகக் கொண்ட ஆட்சிமன்றக்குழு என இரண்டு ஆட்சிமன்றக் குழுக்கள் தற்போதும் தாங்களே உண்மையான ஆட்சிமன்றக் குழுக்களெனக் கூறிக் கொண்டுள்ளன. அது குறித்த கேள்வி நீதிமன்றத்தில் கிடப்பில் இருக்கிறது. அந்நிலையில் பேராயர் தலைமையிலான ஆட்சிமன்றக் குழுவினால் தெரிவு செய்யப்பட்ட ஒருவரைக் கல்லூரியின் பொறுப்பு முதல்வர் என்று கல்லூரிக் கல்வித்துறை இயக்குனர் அறிவித்திருக்கிறார். அதனை ஒட்டியே இப்பிரச்னை மீண்டும் எழுந்துள்ளது.
ஒரு பிரச்னை குறித்த நீதிமன்றத் தீர்ப்பு வராத நிலையில் கல்லூரிக் கல்வித்துறை இயக்குனரகம் எப்படி இந்த அறிவிப்பினைச் செய்தது என்பதே ஒரு ஆச்சரியமான வி­யம். அநேகமாக சிறுபான்மையினர் உரிமை என்ற பெயரில் நிலவுவதும் பல சமயங்களில் தவறாகப் பயன்படுத்தப்படுவதுமான கண்ணோட்டம் பேராயருக்குத் தெரிந்த வெறெந்தக் கைவந்த கலையும் இடைத் தலையீடு செய்யாதிருந்திருக்கும் பட்சத்தில் அதற்குக் காரணமாக இருக்கக் கூடும்.

Thursday, February 24, 2011

அமெரிக்கன் கல்லூரி நிர்வாக குளறுபடிகளினால் மாணவர்கள் தவிப்பு !

கடந்த ஆண்டு  மதுரை அமெரிக்கன் மாணவர்களின் கடும் போராட்டங்களினால் அக்கல்லூரியில் தான்தோன்றி தனமாக கோலோச்சி கொண்டிருந்த பிஷப்பின் அதிகாரம் அடக்கப்பட்டது. உயர் நீதி மன்ற தீர்ப்பின்படி கல்லூரியில் இயல்பான நடைமுறை திரும்பியது. தற்போது திரும்பவும்  பிஷப்பிற்கும்  , முதல்வருக்குமான பணிப்போரினால்  கல்லூரியின் இயல்பான நடைமுறை  பாதிக்கப்பட்டு மாணவர்களின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் அரசு உடனடியாக தலையிட்டு கல்லூரி நிர்வாகத்தை தனது பொறுப்பில் எடுத்து மாணவர்களின் தடையில்லாத கல்விக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

பஸ் டே என்ற பெயரில் மாணவர்கள் அரங்கேற்றும் பாசிச கலாச்சாரம்

இன்று சென்னை கலை கல்லூரி மாணவர்கள் பஸ் டே என்று ஒரு பேருந்தை வாடகைக்கு அமர்த்தியோ அல்லது பஸ்ஸை வழிமறித்து  அதில் உள்ள பயணிகளை  இறக்கி விட்டு விட்டு அந்த பேருந்தை ஊர்வலமாக  அழைத்து  செல்கின்றனர்  அப்போது ஏற்கனவே கடும் போக்குவரத்து நேர்சலில் சிக்கி தவிக்கும்     சென்னை  மக்கள் இந்த வேண்டாத  செயலால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். ஒரு முன்னேறிய சென்னை போன்ற பெரு நகரத்தில் இவ்வாறு பொது மக்கள் அவதிக்குலாக்கப்படுவது கண்டிக்கத்தக்கதாகும்.  
மாணவர்களுக்கு பணஉதவி போன்றவை ஆளும், எதிர் கட்சிகள் தரப்பில் தரப்படுகிறது. ஆளும் அரசும் இதை கண்டும் காணாமலும்  கண்ணை  மூடிக்கொண்டுள்ளது. அப்போது தெருவில் போகும் பெண்களை  கேலி செய்வது அந்த பெண்களை மானபங்கபடுத்தும் செயலையும் இந்த மாணவர்கள் அரகேற்றுகின்றனர். இது மாணவர்கள் மீது மக்களுக்கு வெறுப்பையே ஏற்படுத்தும். மாணவர்கள் பகத்சிங் போல இருக்க வேண்டுமே ஒழிய கருணாநிதி போல அல்ல.