Monday, March 21, 2011

அமெரிக்கன் கல்லூரி ஆசிரியர் - மாணவர் போராட்டமும்

அதனை ஆதரிக்க வேண்டியதன் அவசியமும்

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பெரும்பாலான ஆசிரியர்களும் மாணவர்களும் வகுப்புகளுக்குச் செல்ல முடியாத சூழல் கல்லூரிக் கல்வி இயக்குனரகத்தால் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லூரியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முதலில் பிரச்னை உருவான போது அதில் பகத்சிங் மாணவர் இளைஞர் கூட்டமைப்பு என்ற பெயரில் கல்லூரியின் மாணவர் மற்றும் கல்வி நலனுக்காக நாங்கள் போராடினோம். அந்த அடிப்படையில் தற்போது கல்வியின் பால் அக்கறை கொண்ட மதுரை மக்களின் மனதில் இருப்பதாக நாங்கள் உணரும் சில கேள்விகளுக்கான பதில்களை முன்வைப்பது இது குறித்து நிலவும் குழப்ப நிலையை அகற்ற உதவும் என்று கருதி அக்கேள்விகளையும் அவற்றிற்கான பதில்களையும் முன் வைக்கிறோம்.

தற்போதைய அமெரிக்கன் கல்லூரிப் பிரச்னை என்ன? அதற்குக் காரணம் யார்?
 மதுரை ராமநாதபுரம் திருமண்டிலப் பேராயர் தலைமையில் இயங்கும் ஆட்சிமன்றக் குழுவினால் நியமிக்கப்பட்ட ஒருவர் தற்போது கல்லூரி முதல்வராக இருப்பதே தற்போதைய அமெரிக்கன் கல்லூரியின் பிரச்னை. இப்பிரச்னை உருவாகக் காரணம் இந்த  நியமனத்திற்குத்  தமிழ் நாட்டின்  கல்லூரிக் கல்வி இயக்குனரகம் அளித்துள்ள தவறான ஒப்புதலே.

Friday, March 11, 2011

கல்வியின் பால் அக்கறை கொண்ட மக்களின் பிரச்னையாக மாற்றப் படாமல் அமெரிக்கன் கல்லூரி பிரச்னைக்குத் தீர்வு இல்லை

மீண்டும் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பிரச்னை தலைதூக்கியுள்ளது. அதாவது ஏற்கனவே தலைதூக்கி இடையில் நீதிமன்றத் தீர்ப்பினால் மட்டுப்பட்டிருந்த கல்லூரியை மதவாதிகள் கையகப்படுத்தும் பிரச்னை மீண்டும் தலை தூக்கியுள்ளது. கல்லூரியின் முன்னாள் முதல்வர் சின்னராஜ் ஜோசப் ஜெயக்குமார் அவர்களைச் செயலராகக் கொண்ட ஆட்சிமன்றக் குழு, மதுரை ராமநாதபுரம் மண்டிலப் பேராயரைத் தலைவராகக் கொண்ட ஆட்சிமன்றக்குழு என இரண்டு ஆட்சிமன்றக் குழுக்கள் தற்போதும் தாங்களே உண்மையான ஆட்சிமன்றக் குழுக்களெனக் கூறிக் கொண்டுள்ளன. அது குறித்த கேள்வி நீதிமன்றத்தில் கிடப்பில் இருக்கிறது. அந்நிலையில் பேராயர் தலைமையிலான ஆட்சிமன்றக் குழுவினால் தெரிவு செய்யப்பட்ட ஒருவரைக் கல்லூரியின் பொறுப்பு முதல்வர் என்று கல்லூரிக் கல்வித்துறை இயக்குனர் அறிவித்திருக்கிறார். அதனை ஒட்டியே இப்பிரச்னை மீண்டும் எழுந்துள்ளது.
ஒரு பிரச்னை குறித்த நீதிமன்றத் தீர்ப்பு வராத நிலையில் கல்லூரிக் கல்வித்துறை இயக்குனரகம் எப்படி இந்த அறிவிப்பினைச் செய்தது என்பதே ஒரு ஆச்சரியமான வி­யம். அநேகமாக சிறுபான்மையினர் உரிமை என்ற பெயரில் நிலவுவதும் பல சமயங்களில் தவறாகப் பயன்படுத்தப்படுவதுமான கண்ணோட்டம் பேராயருக்குத் தெரிந்த வெறெந்தக் கைவந்த கலையும் இடைத் தலையீடு செய்யாதிருந்திருக்கும் பட்சத்தில் அதற்குக் காரணமாக இருக்கக் கூடும்.