Tuesday, May 31, 2011

சமச்சீராகுமா கல்வி

தமிழக அரசின் கல்வி   முதலாளிகளுக்கு  ஆதரவான போக்கும் ,அரசு பள்ளிகளின்  அவல நிலையும்


கல்வி என்பது அனைவருக்கும் இலவசமாக கிடைக்கவேண்டும். அதுவும் தரமான கல்வியாக இருக்கவேண்டும், என்பது இன்றுள்ள அனைத்து பெற்றோர்களின் நியாயமான எதிர்பார்ப்பாகும்.  தமிழகத்தில் அரசு பள்ளிகளு கென்று தனியான பாடத்திட்டமும் ,  மெட்ரிக் பள்ளிகளுகென்று தனியான பாடத்திட்டமும்  இருக்கிறது.  அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு  கடும் போட்டி நிலவும்  வேலைச்சந்தையில்  போட்டியிடக்கூடிய  எந்த வலுவும்  தர இயலாததாக அரசு பள்ளிகளுக்கான பாடத்திட்டம் இருக்கிறது  என்பது தான் இன்றுள்ள நிலைமை.

Friday, May 20, 2011

தனியார் பள்ளி முதலாளிகளின் கட்டணக் கொள்ளையைத் தடுக்க இப்படிச் செய்தாலென்ன?

தங்கள் பிள்ளைகளின் வளமான எதிர்காலம் பற்றிய கனவிலிருக்கும் பெற்றோர்களை அட்டையாய் உறிஞ்சும் தனியார் பள்ளி முதலாளிகளின் கட்டணக் கொள்ளை நாடறிந்ததே. பத்தாண்டுகாலமாக இக்கட்டணக் கொள்ளை அரசின் காதிலேயே விழாமல் இருந்தது. தாங்கமுடியாத கட்டணச் சுமையால் நிதானமிழந்த சில பெற்றோர்கள் ஆங்காங்கே கலகங்களில் ஈடுபடுவதும்; பின்னர் காவல்துறையினரால் ஏமாற்றி - மன்னிக்கவும் சமாதானப்படுத்தி அனுப்பி வைக்கப் படுவதும் வாடிக்கையான ஒன்றாகிக் கொண்டிருந்தது.